இந்தியாவில் சென்னை உள்பட ஐந்து நகரங்களில் U A E யின் சாலை நிகழ்ச்சிகள்!
மேலும் அதிகரிக்கும் வகையில் அபுதாபி சுற்றுலாத்துறை ஐந்து இந்திய நகரங்களில் தங்கள் நாட்டைப் பற்றிய சாலை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டது.
இதன்படி கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 29-ம் தேதி வரை மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புது டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றது. எதிஹாட் ஏர்வேஸ், யஸ் ஐலண்ட் ஹோட்டல்ஸ் போன்ற 14 அபுதாபி சுற்றுலா பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளன என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,07,995 இந்திய சுற்றுலாப் பயணிகள் அபுதாபிக்கு சென்றுள்ளதாகக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 35 சதவிகிதம் அதிகமாகும். ஐக்கிய அரபுக் குடியரசின் எதிஹாட் ஏர்வேஸ் பத்து இந்திய நகரங்களில் இருந்து தங்களுடைய தலைநகர் அபுதாபிக்கு ஒரு வாரத்திற்கு 112 விமான சேவைகளை மேற்கொள்ளுகின்றது.
விரைவான மற்றும் வசதியான பயண விருப்பங்களை வழங்கும் எதிஹாட் மற்றும் அதன் கூட்டாளரான ஜெட் ஏர்வேசின் சேவைகளால் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது என்று இந்நிறுவனத்தின் வெளியுறவு அலுவல் இயக்குனர் முபாரக் அல் நுயைமி தெரிவித்தார். மிகப் பெரிய எப்1 கார்பந்தய தடத்தைக் கொண்ட உலகின் ஒரே பெரிய ஹோட்டலான யஸ் வைஸ்ராய் மூன்று பெரிய இந்தியத் திருமணங்களையும் இதுவரை நடத்தியுள்ளது.
இதுபோல் சஞ்சீவ் கபூரின் புதிய இந்திய ஹோட்டலான ‘சிக்னேச்சர்’ மற்றும் அபுதாபியில் படம் பிடிக்கப்பட்ட ‘பாங் பாங்’ என்ற ஹிரித்திக் ரோஷனின் புதிய திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு பின் இந்தியப் பயணிகள் வரவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுமட்டுமின்றி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்சமயம் இங்கு வசித்துவருவதாகவும் அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Abu Dhabi to Conduct Road Shows in Indian Cities
Att.Editors: The following item is from the Emirates News Agency (WAM)
ABU DHABI,Dec 26 (WAM) – The United Arab Emirates (UAE) Abu Dhabi Tourism ‘&’ Culture Authority (TCA Abu Dhabi) is to begin 2013 with a five-city road show taking in key cities in India as it looks to build inbound tourism from the Republic, which is now the emirate’s second largest international hotel guest source market.
The authority, together with its trade partner Lama Tours, will lead a 12-member industry delegation representing its attractions, hotels and airline sectors in a five-day whistle-stop promotion taking in New Delhi, Ahmedabad, Mumbai, Bangalore and Chennai from January 7 to 11.
“This is the first time we have included Ahmedabad and this is to leverage the recent launch, by Etihad Airways, of a daily flight from this largest Gujarat city to Abu Dhabi,” said Mubarak Al Nuaimi, International Promotions Manager, TCA Abu Dhabi.
“Improving air access is key to the Indian market and now with Abu Dhabi receiving 124 flights a week from the country, we have capacity to leverage,” said Al Nuaimi. “We also have major events which will appeal to the Indian market most notably January’s Abu Dhabi HSBC Golf Championship and February’s Gourmet Abu Dhabi culinary festival.
“So far we have taken the pulse of the Indian market by taking part in exhibitions and road shows – now we are upping the stakes with a plan for full-time, on-the-ground representation and increasing in-country promotions, which will include being present at India’s main travel fair, SATTE, next month,” added Al Nuaimi.
From January to the end of November this year some 125,180 Indian guests stayed in Abu Dhabi’s hotels and hotel apartments – a 30% increase on the first 11 months of last year – and they accounted for 496,581 guest nights, which is a 34% rise on the 2011 comparative period. Indian guests are staying in Abu Dhabi’s hotels for an average of 3.97 nights. (WAM) (END/2012)
(
Category: வளைகுட செய்தி
0 comments