வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் உதவியுடன் ஷார்ஜாவில் காணாமல் போன இந்திய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்!
வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் உதவியுடன் ஷார்ஜாவில் காணாமல் போன இந்திய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஷார்ஜாவில் உள்ள அல் முசல்லா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதி தங்களின் 9 மற்றும் 8 வயது மகள்களுடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 3ம் வகுப்பு படிக்கும் அந்த 8 வயது சிறுமி வீட்டை விட்டு அவராக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரின் அக்காவும், அப்பாவும் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
சிறுமியின் தாய் மாலை நேர ஷிப்ட் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து கண்விழித்த அந்த தந்தை தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடினார். உடனே அவருக்கு தெரிந்தவர்கள் சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.
சிறுமியின் புகைப்படத்தை பார்த்த ஒருவர் அவர் ரோல்லா பகுதியில் இருக்கும் ஜாய் ஆலுக்காஸ் சென்டர் அருகே நின்ற சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டார். சமூக வலைதளங்களின் உதவியால் காணாமல் போன சிறுமி 5 மணிநேரத்திற்குள் கிடைத்துவிட்டார்
Category: வளைகுட செய்தி
0 comments