தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பசு தீவனம், இடு பொருட்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளதை அடுத்து பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்து ரூ.28-க்கும், எருமை பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்ந்து ரூ.35-க்கும், கொள்முதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொள்முதல் விலை உயர்த்தபடுவதால் நுகர்வோருக்கு சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையும் உயர்த்தப்படுகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு லிட்டர் பால் விற்பனை விலை ரூ.24-ல் இருந்து ரூ.34- ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Category: ALL Lab, மாநில செய்தி
0 comments