பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!
பெரம்பலூர், அக்.25:
பெரம்பலூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் கடந்தஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செங்கோடன், கந்தன், ரெங்கசாமி, முருகன், முரளி உள்ளிட் டோரின் 20க்கும்மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் காணாமல் போனது. அருகிலுள்ள மலைப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிலர், மலைமேல் ஆட்டு எலும்புகள், மயில் இறக்கைகள் கிடப்பதாகத் தெரிவித்தனர். அதேபோல பலஇடங்களில் சிறுத்தையின் காலடித்தடம் இருந்ததைத் தொடர்ந்து கிராமத்தாரின் புகாரை ஏற்று வனத்துறையினரால் சோதனையிடப்பட்டது. பிறகு செப்டம்பர் 8ம்தேதி பொள்ளாச்சி வனஉயிரியல் காப்பகத்திலிருந்து சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளைப் பிடிக்கக்கூடிய கூண்டு வரவழைத்து பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்தபடி 9ம்தேதி இரவு கூண்டிற்குள் சிக்கிய ஆண்சிறுத்தை 10ம்தேததி சத்தியமங்கலம் வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட் டது. இதனை அடுத்துதான் மக்களுக்கு மேலும் அச்சம் ஏற்பட்டது. பிறகு அந்தச் சிறுத்தை வேறு பல இடங்களில் நடமாடியபோது பதிவான காலடித்தடங்களைப் பார்த்த மக்கள் பெண்சிறுத்தை, 2குட்டி களோட இப்பகுதியில்தான் உள்ளது என கூறப்பட்டது.
எளம்பலூர் சாலையில் மாடுகளை கடித்துக் குதறியது, வடக்குமாதவி சாலையில் நாயை கடித்துகுதறியது என காயம்பட்டுக்கிடந்த கால்நடைகளை வைத்து பெரம் பலூரைச்சுற்றி சிறுத்தைகள் உள்ளதாக பலவாரங்கள் பீதியாகவே பொதுமக்கள் காணப்பட்டனர். இதனால் வனத்துறையினரும் உறக்கத்தை தொலைத்து ஊர்ஊராகத் சிறுத்தைகள் உள்ளதா? என தேடியலைந்தனர். ஜனவரி மாதம்வரை இருந்த சிறுத்தை பீதி பிறகுஇல்லாமல் போனது.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் துறைமங்கலம் நகராட்சி 8வது வார்டு, விவேகானந்தர், பள்ளிவாசல் பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் இருப்பதாக வெளியான தகவலால் மீண்டும் பொது மக்கள் மத்தியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. விவேகானந்தர் நகரில் ரத்தினம் என்பருக்கு சொந்தமான பைக்கை வெளியே நிறுத்தியிருந்தார். வண்டியின் ஷீட்டை ஒரு மர்ம விலங்கு கடித்து குதறியது தெரியவந்தது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரிந்த மற்றும் வீட்டில் வளர்த்து வந்த நாய்களை கடந்த சில தினங்களாக காணவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சிறுத்தையின் நாசவேலையாகத்தான் இருக்குமோ என்று பொதுமக்கள் மத்தியில் ஒருவித பீதியை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனகாவலர்கள் ரவீந்திரன், தர்மராஜ் விவேகானந்தர் நகருக்கு பகுதிக்குச்சென்று பதிந்துள்ள காலடித்தடங்கள் சிறுத்தையின் காலடித் தடங்களா? எனப்பார்வையிட்டு, செல்போன் கேமராக்களில் அவற்றைப் பதி வும் செய்துகொண்டனர். அவற்றை ஏற்கனவே பதிவுசெய்துள்ள சிறுத்தையின் காலடித் தட மாதிரிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து உறுதிசெய்வதாகத் தெரிவித்துச் சென்றனர். மேலும் இரவுநேரங்களில் தனியாக வீதிகளில் நடமாடவேண்டாம், மர்ம வில ங்குக ளைக்கண்டால் வனத் துறையினருக்கு உடனே தெரிவிக்க வேண்டும் எனக்கூறிவிட்டுச் சென்றனர்.
இதனால் ஓராண்டுக்குப்பிறகு பெரம்பலூரில் சிறுத்தை குறித்து பீதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: மாவட்ட செய்தி
0 comments