.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

2014ம்  ஆண்டு ஆரம்பமாகி விட்டது.உங்களுக்காக 2013ம் ஆண்டில் நடந்த முக்கிய செய்திகளை தினத்தந்தி நாளிதழ் புத்தகமாக வெளியிட்டுள்ளது.இதில் உலகம் ,இந்தியா ,தமிழ் நாட்டில் நடந்த முக்கிய செய்தியும் சினிமா ,விளையாட்டு செய்திகளும் இடம் பெற்றுள்ளன.நீங்கள் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் இதோ .....


Add caption












































சென்னை:  சிங்கப்பூர், இலங்கையில் இருந்து வரும் விமானங்களில் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 9 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இலங்கையை சேர்ந்த 2 பேர் வைத்திருந்த பை, சூட்கேசில் எதுவும் இல்லை. அப்போது இருவரும் வயிறு வலிக்கிறது, சீக்கிரம் பரிசோதித்து அனுப்பும்படி கூறினர். 

இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில், அவர்கள் வயிற்றில் சிறிய குண்டுகள் இருந்தது தெரியவந்தது. உடனே 2 பேருக்கும் எனிமா கொடுத்து குண்டுகளை வெளியே எடுத்தனர். இருவரின் வயிற்றில் இருந்தும் அரை கிலோ தங்க குண்டுகள் வீதம் 1 கிலோ தங்க குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

காலை 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்தனர். ஒருவரது சூட்கேசில் 2 கிலோ தங்க கட்டிகளும், மற்றவரது சூட்கேசில் 1 கிலோ தங்க கட்டியும் சிக்கியது. மதிப்பு ரூ.90 லட்சம். நண்பகலில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிவகங்கையை சேர்ந்த ஒருவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று திரும்பி இருந்தார். 

அவரது சூட்கேசில் அரை கிலோ தங்கமும், ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த அரை கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ஸீ 30 லட்சம்.  

நேற்று காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரையில் நடத்திய சோதனையில் 3 விமானங்களில் வந்த 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 

அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம்  ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.

இதனை மிஞ்சும் அளவுக்கு,  ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000  வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் திரண்டனர்.

அதன் புகைப்படங்கள் இதோ...  






















































ads2

Catwidget2

Catwidget1