குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
குன்னம் அருகே அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி ஊராட்சி குன்னம் அருகே வீரமாநல் லூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. அடிப் படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி, பஸ் வசதி ஆகியவை செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாக்கடை நீர் ரோட்டில் தேங்கி நிற்பதாகவும், இத னால் கொசு தொல்லை ஏற்படுவதாகவும், நோய் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் இந்த கிராம மக்கள் கூறி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அடிப் படை வசதிகள் செய்து தர கோரி 50 பெண்கள் உள்பட 150 பேர் குன்னம் அருகே அரியலூர்–திட்டக்குடி சாலை வயலப்பாடியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த குன்னம் தாசில்தார் மணி வேலன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழரசி மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட
வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கிராம மக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித் ததை தொடர்ந்து சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனர்.
Category: ALL Lab, மாவட்ட செய்தி
0 comments