பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!
FILE |
பெரம்பலூர்,: பெரம்பலூர் அருகே, இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தில், தீபாவளி அன்று, சிலர், தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பக்கத்து தெருவை சேர்ந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து ரெங்கராஜ், 45 என்பவர் கொடுத்தப் புகார்படி, மற்றொரு பிரிவை சேர்ந்த, ஐந்து பேர் மீது பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், இரு பிரிவினரும், நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கலெக்டர் ஆய்வுக்கு சென்றதால், டி.ஆர்.ஓ., ராஜன்துரையிடம் மனு கொடுத்தனர். அவர், ""தாசில்தாரிடம் கொண்டு போய் கொடுங்கள், அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்,'' என கூறினார். அதனால், அவர்கள் மனுவோடு திரும்பிச் சென்றனர்.
Category: ALL Lab, மாவட்ட செய்தி
0 comments