துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !

+2,டிப்ளமா படித்து இரண்டாண்டு அனுபவம் உள்ளவர்கள் தங்கள் துறை சார்ந்த வேலைக்கு முயற்சிக்கலாம். அவர்கள் குறைந்தது 40,000 முதல் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து மூன்று ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வங்கி சேவைகள், தகவல் தொழில் நுட்பம், விற்பனை பிரதிநிதிகள், ஃபார்மா, பொறியியல் வல்லுநர்கள் போன்றோருக்கு குறைந்தபட்ச சம்பளமே 1,00,000 ரூபாயில் ஆரம்பிக்கும்.
இளமையும், வேகமும்,சம்பாதிக்க துடிக்கும் வேட்கையும்,சர்வதேச தரத்திலான அனுபவம் வேண்டுபவர்களும் இங்கு வேலைக்கு வரலாம்.உங்கள் சம்பளத்தில் 60%-70% பணத்தை ஊருக்கு அனுப்ப முடியும்.உங்கள் சம்பாத்தியத்தில் பத்து பைசா கூட இந்நாடு வரியாக கேட்காது. (இங்கு பொழுதுபோக்கு அம்சங்களும்,காசை செலவு செய்வதற்கான விடயங்களும் ஏராளம் உண்டு. மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு)
வேலை கிடைப்பதற்காக ஏஜென்ட்டுகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.இங்கு பெரிய நிறுவனங்கள் யாரும் ஏஜென்ட்டுகள் மூலம் ஆள் எடுப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.இங்கு வேலைவாய்ப்பு இணையதளங்கள் நிறைய உண்டு,அதில் உங்கள் ‘Resume’மை அப்லோட் செய்து நீங்கள் தேடும் வேலை வரும்போது
விண்ணப்பியுங்கள்.நேர்முகத்தேர்வு பெரும்பாலும் தொலைபேசி /வெப்கேம் மூலம் முடிந்துவிடும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும்போது யாரேனும் பணம் அனுப்ப சொன்னால் அனுப்ப வேண்டாம்.
இங்கு கட்டிட வேலைக்கோ,துப்புரவு பணிக்கோ யாரேனும் வருவதாக கிளம்பினால் அவர்களிடம் எடுத்து சொல்லி நம்நாட்டிலேயே பணிபுரிய சொல்லுங்கள்.அந்த வேலைக்கு இங்கு பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை,ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருகிறார்கள்.
ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் 60 நாள் விசிட் விசாவில் வந்து நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். வெற்றி வாய்ப்பு 50% மட்டுமே.(செலவு 1,00,000 வரை ஆகும்)
வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை நான் அவ்வப்போது பதிவு செய்கிறேன்.தேவையுள்ளோர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.(அதற்கு சேவை கட்டணம் உங்களின் அன்பு மட்டுமே )
நான் பணிபுரியும் வங்கியில் (Govt Bank) ஜனவரி மாதத்தில் 340 பணியிடங்களுக்கு (Operation /Sales /Technical) ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள்.(குறைந்தபட்ச சம்பளம் 1,30,000).மேற்கண்ட துறைகளில் மூன்றாண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் (One of the World’s 50 Safest Bank)
நவம்பர்-ஏப்ரல் வரை இங்கு நல்ல காலநிலை நிலவும்.சுற்றுலா வருவதற்கு ஏற்ற நேரம். சுற்றுலா வாங்க !
பி.கு: துபாய் அரபு நாடு என்பதால் சவுதிக்கு நிகராக கடுமையாக இருக்கும் என பலரும் குழப்பிக்கொள்கிறார்கள்.ஆனால் அப்படி இல்லை.ஐரோப்பிய கலாச்சாரத்தில் இருக்கும் ஒரு அரபு தேசம் துபாய். யூ டியூபிலும்,கூகுள் இமேஜிலும் துபாய் குறித்து பார்த்துவிட்டு இங்கு சுற்றுலாவுக்கோ /வேலைக்கோ வாங்க !
நம்பிக்கை ராஜ்
0 comments