200 மில்லியன் சவுதி ரியால்களை ஃபாலஸ்தீனத்திற்கு நிதி உதவி செய்துள்ளது சவுதி அரேபியா:

இந்த தொகையை தாக்குதலில் படுகாயமடைந்தோருக்கு சிகிச்சைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நேரத்தில் இது மிக மிக அவசியமானது, அதனடிப்படையில் சவுதி அரேபியாவின இந்த மனிதாபிமான உதவிப் பணி பாராட்டுதலுக்குரியது.
ஆனால் இது மட்டும் போதாது, பொருளாதார உதவி மட்டும் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு செய்தல் போதாது, உடலாலும் உழைக்க வேண்டும், பொருளாலும் உதவிடல் வேண்டும்.
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு¥ட்டுகிறது.
(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல் புகாரி: 2446.
நிலப்பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், பொரளாதார வசதியிலும் எந்த வகையிலும் குறைவில்லாத சவுதி அரேபியா தமது அணடை முஸ்லிம் நாடுகளுக்கு எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கும்போது பொருளாலும், உடலாலும் உழைக்க முன் வரவேண்டும்.
அதனடிப்படையில் அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்பட முன் வந்தால் சிறிய தீவைப் போன்ற ஆக்ரமிக்கப்பட்ட பயங்கரவாத இஸ்ரேல் இருக்கும் இடம் தெரியாமல் சாம்பல் பறப்பது போல் இன்ஷா அல்லாஹ் பறந்து விடலாம்.
Category: வளைகுட செய்தி
0 comments