பலஸ்தீனர்களிற்கான மருத்துவ_சிகிச்சைக்காக எல்லை வாயில்களை திறந்தது எகிப்திய அரசு – !!
எல்லை வாயில்களை திறந்தது எகிப்திய அரசு – பலஸ்தீனர்களிற்கான மருத்துவ_சிகிச்சைக்காக !!
இஸ்ரேலிய ராணுவம் மேற்கொள்ளும்… மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இந்த நிமிடம் வரை 127 பலஸ்தீனர்கள் பரிதாபமாக தங்கள் உயிரை விட்டுள்ளனர். வீடுகள், பாடசாலைகள், மசூதிகள் என இலக்கு வைத்து இஸ்ரேலிய குண்டுவீச்சு விமானங்கள் தாக்குததல்களை நிகழ்த்தி வருகின்றன.
இதுவரை 1200 இற்கும் மேற்பட்ட சோட்டீஸ்களை (விமான தாக்குதலிற்கான பறப்புக்கள்) இஸ்ரேலிய வான்படை மேற்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் போராளிகளின் தரப்பு இழப்புக்கள் மிகவும் சொற்பமானதே. சர்வதேசரீதியில் தடை செய்யப்பட்டுள்ள “பொஸ்பரஸ்” குண்டுகளை மக்கள் செறிந்து நிற்கும் நிலைகளை நோக்கி இஸ்ரேல் வீச ஆரம்பித்துள்ளது. இவை மிகப்பெரிய போர்க்குற்றம்.
சதாம் ஹுஸைன் குர்த்திஸ்த்தான் மக்களிற்கு எதிராக பாவித்த இரசாயன குண்டுகளிற்காக அவரை தூக்கிலிட்ட அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளும் பெஞ்சமின் நெதன்யாகூ பாவிக்கும் பொஸ்பரஸ் குண்டுகளைப்பற்றி கண்டும் காணாதிருக்கின்றன. பொஸ்பரஸ் குண்டுகள் பட்ட இடமெல்லாம் பற்றி எரியும் தன்மை கொண்டவை. சில கணங்களிலேயே உடலை ஊடறுத்து எரித்துவிடும் இரசாயனதன்மை கொண்டவை. மத்தாப்புப்போல சீறிச்சிதறி எந்த திசையில் எந்த இலக்கில் வரும் என்று கணிக்க முடியாதவாறு அவை சிதறிய மழைத்துளிகள் போல வந்து விழுபவை. காஸாவில் படுகாயப்படும் முஸ்லிம்களிற்கு உதவும் முகமாக எகிப்து தனது “ரபா” எல்லை வாயில்களை திறந்து விட்டுள்ளது. தென் சினாயில் உள்ள எகிப்திய மருத்துவ மனைகள் பலஸ்தீனர்களை உள்வாங்கவும் சிகிச்சையளிக்கவும் தயார்படுத்தப்பட்டுள்ளன. எகிப்திய டசன் கணக்கான அம்புயுலன்ஸ் வண்டிகள் ரபாவின் எல்லையருகில் காத்து நி்ற்க்கின்றன காயப்பட்ட பலஸ்தீனர்களை ஏற்றிச்செல்ல.
காஸாவிற்கான இஸ்ரேலை பைய்பாஸ் பண்ணி செல்லும் ஒரே மார்க்கம் இந்த எகிப்திய ரபா எல்லைகளே. முர்ஸியின் இஃஹ்வானிய அரசு வீ்ழ்த்தப்பட்டு, ஜெனரல் சீசியின் அரசு ஆட்சியை கைப்பற்றிய போது சினாயின் வடக்கு பகுதியில் அல்- காயிதாவின் வட ஆபிரிக்காவிற்கான மக்ரிப் எகிப்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. தினம் ஒரு தாக்குதல் என்ற அடிப்படையில் அது தனது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தது. அப்போது அது ஹமாஸை தங்களுடன் இணையுமாரும் எகிப்திய அரசிற்கான போராட்டத்தில் பங்கேற்குமாறும் கோரியிருந்தது. இஃஹ்வானிய அமைப்புக்களுடன் நிறைய தொடர்புகளையுடைய ஹமாஸின் இராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் அல்- கஸ்ஸாம் அணியின் தலைமை அல்- காயிதாவின் கோரிக்கையை நிராகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதன் விளைச்சல் தான் இப்போது ரபாவிற்கான பாதைகள் திறக்கப்பட்டு காயப்பட்ட பலஸ்தீனர்கள் உடனடி மருத்துவ சிகிச்சைகளிற்காக எகிப்தினுள் உள்வாங்கப்படுவதாகும்.
இஸ்ரேலிய அட்டூழியங்களிற்கு எதிராக இதுவரை எந்த முஸ்லிம் தேசமும் செயற்பட முன்வரவில்லை. துருக்கி பிரதமர் பலஸ்தீனர்கள் எங்கள் சொந்தங்கள் என கூறியதும், கத்தார் தேசம் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய படுகொலைகளை கண்டித்ததையும் தவிர. ஆக்கபூர்வமாக பலஸ்தீனர்களிற்கு சமயத்தில் உதவியவர்கள் இருவர். ஒரு ஹஸன் நஸ்ருல்லாஹ். ஹிஸ்புல்லாக்களின் தலைவர். மற்றையவர் ஜெனரல் சீசி. நாம் யாரை எதிர்பார்த்தோமோ அவர்கள் வாழாவிருக்க, நாம் யாரை எதிர்த்தோமோ அவர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள்.

Like
Category: வளைகுட செய்தி
0 comments