துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச சம்பளத்தில் மாற்றமில்லை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச சம்பளத்தில் மாற்றமில்லை என்றும் விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழக்கம் போல நடைபெறுகிறது என்றும் துபாயின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகார இயக்குனர் ஜெனரல் முகம்மது அஹமது அல் மாரி தெரிவித்துள்ளார்.
குடும்ப விசா பெற குறைந்த பட்ச சம்பளமாக 4,000 திர்ஹமும் கம்பெனி தங்கும் வசதி அளித்திருந்தால் 3,000 திர்ஹமும் தேவை என்ற நிலையே தற்பொழுதும் நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்ற வெள்ளிக்கிழமை அன்று துபாயில் உள்ள கலீஜ் டைம்ஸ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் துபாயில் குடும்ப விசா பெறுவதற்கு குறைந்தபட்ச மாத சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்த செய்திகள் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் , டைப்பிங் சென்டர்கள் மற்றும் துபையில் வாழும் வெளிநாட்டவர்கள் ஆகியோரிடம் சேகரித்த தகவலின் அடிப்படையில் வெளியிட்டதாக கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது
செய்தி தகவல் : கலீஜ் டைம்ஸ்
தற்போதைய செய்தி: Khaleej Times latest news முந்தைய செய்தி: Khaleej Times earlier news
Category: துபாய்
0 comments