சிறுமியை திருமணம் செய்த வி.களத்தூர் வாலிபர் மற்றும் மணப்பெண்ணின் தாய் ,தந்தை கைது!
குன்னம்,ஜூன்17:
குன்னம் அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னம் அருகே உள்ள கொளப்பாடியை சேர்ந்தவர் தர்மராஜ் என்கிற தர்மலிங்கம் (40). இவரது மகள் சசிபானு (16). 8ம் வகுப்பு படித்து விட்டு தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். தர்மலிங்கம் தனது மனைவி மலர் இறந்த பிறகு வி,களத்தூர் கிராமம் வண்ணாரம்பூண்டி பகுதியை சேர்ந்த சுகுணா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். சுகுணாவின் தம்பி சுரேஷ் (30).
இந்நிலையில் திருமணமாகி தனது மனைவி செந்தாமரையை பிரிந்து வாழும் சுகுணாவின் சகோதரரான சுரேஷ் கொளப் பாடி கிராமத்திற்கு அவரது அக்கா சுகுணா வீட்டிற்கு வந்த போது சசிபானுவிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தர்மலிங்கம் சுகுணா முன்னிலையில் கடந்த மே மாதம் 15ம்தேதி சசிபானுவிற்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டினார். பின்னர் வி.களத்தூர் கிராமம் வண்ணாரம் பூண்டிக்கு அழைத்துச் சென்று சசிபானுவை பலாத்காரம் செய்தார். இதனால் சசிபானு அங்கிருந்து தப்பி கொளப்பாடி கிராமத்திற்கு வந்து நடந்தவற்றை தனது தாத்தாவிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பேச்சியம்மாள் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, வழக்கு பதிவு செய்து சுரேஷ் மற்றும் தர்மலிங்கம், அவரது மனைவி சுகுணா ஆகிய மூவரையும் கைது செய்து, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி சுரேஷ் உத்தரவின் பேரில் சிறையிலடைத்தார்.
Category: வி.களத்தூர்
0 comments