பாரத ஸ்டேட் வங்கி (S.B.I.) யில் புதிதாக 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை
நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் அந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிமிஸ்ரா இதைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 4 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி 40 ஆயிரம் பேரை வேலையில் சேர்க்க உள்ளதாகக் கூறிய அவர், அதே காலத்தில் சுமார் 35 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சம்பளவிஷயத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இடையே வித்தியாசம் இருந்தபோதிலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் அதிக அளவில் பணி மாறவில்லை என்றும் மிஸ்ரா கூறினார். வங்கிப் பணிகளில் இளம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவத்தால் அவர்கள் கவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Category: வேலைவாய்ப்பு
0 comments