வி.களத்தூரில் நேற்று நடந்த குடியரசு தின சிறப்பு கிராமசபை கூட்டம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் குடியரசுத் தினமான நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது நமது ஊரில் நடந்த கிராம சபை கூட்டத்தை வி. களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடந்தது. இதில் வி. களத்தூர் ஊராட்சி துணை தலைவர் மற்றும் அணைத்து வார்டு உறுபினர்களும் கலந்து கொண்டனர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்கனவே நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் கொடுக்கப் பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
மற்றும்
வி.களத்தூரில் நடைபெற்ற ஊரக விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
THANS : MILLATHNAGAR.COM
Category: வி.களத்தூர்
0 comments