மக்காவில் ஹாஜிகளுக்கு உணவு பொருட்களை வாரி வழங்கும் தொண்டு நிறுவனங்கள்!!!
ஹஜ்ஜின் கடமைகள் நிறைவேற்ற படும் காலத்தில் மக்காவிலும் அதை சுற்றியுள்ள புனித தலங்களிலும் சவுதி அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியார் தொண்டு நிறுவனங்களும் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது
தனியார் நிறுவனங்கள் தங்களது ஹாஜிகளுக்கான அன்பளிப்புகளை உணவு பொருட்களாக கொண்டு வந்து குவிக்கின்றது
ஹாஜிகளுக்கான அன்பளிப்பு நிறுவனம் என்ற பெயரில் பணியாற்றும் ஒரு தொண்டு நிறுவனம் மட்டும் இந்த ஹஜ் காலத்திர்காக மட்டும்
30 இலட்சம் உணவு பொட்டலங்களை தயார் செய்து தேவைபடும் ஹாஜிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது
இது தவிர இந்த நிறுவனம்
மக்காவின் கடும் வெப்பத்தில் இருந்து ஹாஜிகளை பாது காக்கும் பொருட்டு 20 இலட்சம் ஐஸ் கிரீம் பாக்கட்டுகளையும் தயார் இலவசமாக வழங்கி வருகிறது
மேலும்
மேலும் குழிர்பானங்கள் நிறப்ப பட்ட 10 கண்டைனர்களை புனித்தலங்களின் பல் வேறு இடங்களில் நிறுத்தி ஹாஜிகளுக்கு குழிர்பானங்களை இலவசமாக வழங்கி வருகிறது
இது ஒரே ஒரு தொண்டு நிறுவனத்தின் சேவை இது போன்று பல நிறுவனங்கள் அங்கு செயல் பட்டு வருகிறது
இறையருள் நிறம்பி ததும்பும் மக்காவில் தொண்டு நிறுவனங்கள் நம்மை மலைக்க வைக்கும் வித த்தில் மனித நேய சேவையாற்றி வருகின்றன
அந்த தொண்டு நிறுவனங்களுக்கும் அந்த நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் களுக்கும் இறைவன் தன்னருளை இன்னும் சிறப்பாக பொழியட்டும் என் நாம் பிரார்த்திப்போம்

Category: வளைகுட செய்தி
0 comments