கத்தார் தலைநகர்-தோஹாவில் நடமாடும் பள்ளி வாசல் அறிமுகம்!

சுற்றுலா தலங்களில் ஓய்வெடுக்கவும், பொழுது போக்குவதற்கு செல்பவர்கள் குறிப்பிட நேரங்களில் தொழுகையை நிறைவேற்ற நடமாடும் தொழுகை கூடங்களை கொண்ட வாகனங்கள் கத்தார் நாட்டில் அறிமுகப்படுத்தபட்டுளது.
தோஹா ரையான் பூங்காவில் தினசரி மக்ரிப் மற்றும் இஷா தொழுகை சமயத்தில் இந்த வாகனம் உதவியுடன் தொழ முடிகிறது. ஒரே சமயம் பத்து பேர் ஒலு செய்ய பைப் வசதிகள், சுமார் ஆயிரம் பேர் வரை வரிசையில் நிற்குமளவுக்கு தரை விரிப்பு வசதிகள், பாங்கு சொல்ல ஒலி பெருக்கி வசதிகள் மட்டும் hydralic lift வசதியுடன் கூடிய தற்காலிக மினாராக்கள் இந்த வாகனத்தின் சிறப்புகள்.
ஒரு இமாமும் வாகனத்தில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தோஹா கோர்னிஷ் பூங்காவிலும் இத்தகைய நடமாடும் தொழுகைகூட வசதிகள் ஏற்படுதபடவுள்ளது
Category: வளைகுட செய்தி
0 comments