பெரம்பலூர் மாவட்டத்தில் மொபைல் ஃபோன் பழுது நீக்க இலவச பயிற்சி!!
பெரம்பலூர்: பெரம்பலூர் ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூரில் உள்ள ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், வரும், 23ம் தேதி முதல் மொபைல் பழுது நீக்கல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு, 18 வயதுக்கு மேல், 35க்கு குறைவாகவும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். இந்த பயிற்சி தொடர்ந்து, 21 நாட்கள் நடைபெறும். பயிற்சியில் அதிநவீன உபகரணங்களை கொண்டு பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்படும்.
ஆன்டிராய்டு மற்றும் விண்டோஸ் ஃபோன் உட்பட அனைத்து மொபைல்களையும் பழுது நீக்கம் செய்ய பயிற்சி அளிக்கபடும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையஇயக்குனரிடம், பெயர், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
பெரம்பலூர் - ஆத்தூர் ரோட்டில் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி., கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments