சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புபெட்டி சிக்கியது!
உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்புபெட்டி சிக்கியுள்ளது. அந்த பெட்டியை கண்டுபிடித்துள்ளதாகவும் அது தங்கள் வசம் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
விமானத்தில் கருப்பு பெட்டி (பிளாக் பாக்ஸ்) மிக முக்கியமானதாகும். அதில்தான் ரெக்கார்டிங் எந்திரம் உள்ளது. விமானியின் பேச்சுகள் பதிவு செய்யப்படும்.
இந்த பெட்டி கிடைத்ததன் மூலம் விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று தெரியவரும்.
Category: உலக செய்தி
0 comments