சென்னை-காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் திடீர் மறியல் (Photos)!!
சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிப்பில் “நம்பியார்” என்ற படம் உருவாகி வருகிறது. எம்.ஜி.ஆர் படத்துடன் இந்த படத்தின் விளம்பரம் கடந்த வாரம் சென்னையை கலக்கியது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 9ஆம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு சென்னையில் உள்ள பிரபல இரண்டு அரசு கல்லூரி விடுதி மாணவிகள் அழைத்து வரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, தங்களை இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியானதாக மாணவிகள் இன்று பிற்பகலில் அண்ணா சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கூறினர்.
பின்னர் மாணவிகள் மறியலை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். திடீரென மாணவிகள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Category: மாணவர் பகுதி
0 comments