I.T.I ,10-ம் வகுப்பு படித்தோருக்கு அபுதாபியில் வேலைவாய்ப்பு: சென்னையில் நாளை நேர்காணல்!
அபுதாபியில் ஷட்டரிங் கார்பென்டர், ஸ்டீல் பிக்ஸ்சர், ஏ.சி. டெக்னீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறு வனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு ஐடிஐ தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்ற ஷட்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், ஏ.சி. டெக்னீஷி யன்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற உதவி ஷட்டரிங் கார்பென்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் தேவைப் படுகின்றனர்.
இதற்கான நேர்முகத் தேர்வு தமிழக அரசு நிறுவனமான அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தில் நடைபெற உள்ளது. தேர்ந் தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கேற்ற ஊதியத் துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், உணவு, மருத்துவ காப்புறுதி, மிகைநேர பணி ஊதியம் ஆகியவை வெளி நாட்டு வேலை அளிப்போரால் வழங்கப் படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 3 புகைப்படத்துடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
‘ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், எண் 42, ஆலந்தூர் ரோடு, கிண்டி, சென்னை - 600 032 என்ற முக வரியில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஜூலை 19-ம் தேதி (சனிக்கிழமை) நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது.
மேலும் விவரங்களை 044-22505886, 22502267, 9444696724 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
Category: வேலைவாய்ப்பு
0 comments