Home �
மாணவர் பகுதி
� குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் : உயர்நீதிமன்றம் உத்தரவு!
Unknown |
1:34 PM |
0
comments
சென்னை: மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில் 59% மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாக மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார். ஆனால் 60% மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று கூறி, அந்த வங்கி கடன் வழங்க மறுத்து விட்டதாக மனுவில் அவர் கூறியுள்ளார்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரருக்கு கல்வி கடன் வழங்க உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சமந்தப்பட்ட வங்கி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பால் வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பொருளாதரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை மேம்படுத்தவே கல்வி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறினர். கல்வி கடனுக்கு வங்கிகள் வட்டி வசூல் செய்யும் நிலையில் 60% மதிப்பெண் என்ற வரம்பை நிர்ணயம் செய்யக்கூடாது எனக் கூறி வங்கியின் மேல் முறையிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Category:
மாணவர் பகுதி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments