Home �
மாணவர் பகுதி
� தண்ணீரை சேமிக்கும் மல்டி வாஷிங் மிஷின் ! முத்துப்பேட்டை அருகே மாணவர்கள் அறிய கண்டுபிடிப்பு !!
Unknown |
10:01 PM |
0
comments
முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தில் உள்ள மில்லினியம் மெட்ரிக்குலேசன் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தினேஷ் குமார், தினேஷ் பாபு, சேக் ஆதில், 7-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ ஆகியோர் 'அறிவியல் புத்தக ஆய்வு விருதுக்காக' சைக்கிளில் உடற்பயிற்சியிலும், குறைந்த செலவில் தண்ணீரை சேமிக்கின்ற வகையிலும் ஒரு மல்டி வகை துணி துவைக்கும் வாசிங் மிசினை கண்டுபிடித்துள்ளனர். இந்த வாசிங் மிசின் கருவியில் ஒருவர் அமர்ந்து சைக்கிள் போன்று காலால் மிதித்தால் தாங்கள் போடப்பட்ட துணிகள் அப்படியே அடித்து துவைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து தரும் வகையிலும், அதன் தண்ணீர் வீணாகாமல் இருக்க தண்ணீரை சுத்தம் செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த மாநில அளவில் தேர்வுக்காக இரண்டாம் பரிசு பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. இந்த கருவிய உருவாக்கிய மாணவர்கள் தினேஷ் குமார், தினேஷ் பாபு, சேக் ஆதில், மாணவி ஜெயஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு பிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் வழக்கறிஞர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரிகாலன், எம்.எம்.எஸ்.அறக்கட்டளையின் தலைவர் காஜா அலாவுதீன், பள்ளியின் முதல்வர் உதயா, துணை முதல்வர் அன்னப்பூரனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Category:
மாணவர் பகுதி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments