சவூதி அரேபியாவில் இன்று 29ம் நோன்பு லைலதுல் கத்ரு இரவு என்பதை அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான்!
மாஷா அல்லாஹ் மக்கா புனித மஸ்ஜிதுல் ஹரமில் தற்பொழுது மழை பெய்ய ஆரம்பித்திவிட்டது
கடந்த மூன்று மாதங்களாக சவூதி அரேபியாவில் கடும் வரட்சியான காலனிலையே நிலவி வந்தது வழமைக்கு மார்றமாக இன்று 29ம் நோன்பு காலையில் இருந்தே மேகக்கூட்டங்கள் கானக்கூடியாதாய் இருந்தன
ஹதீஸ்களில் லைலதுல் கத்ரு இரவு பற்றி குறிப்பிட்ட அடையாலங்களுடன் நோக்கும் போது இன்று 29ம் நோன்பு லைலதுல் கத்ரு இரவு என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது
எனவே இதனை எம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துவதோடு முஸ்லிம் சகோதரர்கள் அனைவாரும் இபாதத்துகளில் ஈடுபட்டு லைலதுல் கத்ருடைய பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
ரமழான் மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததொரு இரவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். லைலதுல் கத்ர் அதாவது கத்ருடைய இரவு என அழைக்கப்படும் அவ்விரவில் தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
லைலதுல் கத்ருடைய சிறப்பை பற்றி அல்லாஹ் பின்வருமாறு ஸூரதுல் கத்ரில் கூறுகிறான்.
‘நிச்சயமாக நாம் அல்குர்ஆனை லைலதுல் கத்ரிலே இறக்கிவைத்தோம. லைலதுல் கத்ர் என்றால் என்ன என்பதை உமக்கு யார் அறிவித்தது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குமார்களும் இறைவனின் கட்டளையின் பேரில் பூரண சாந்தியோடு உலகிற்கு இறங்குவார்கள். அது அதிகாலை உதயம் வரை நீடிக்கும்’. (ஸூறதுல் கத்ர்)
மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் வருகையால் உலகம் அமைதியடைகிறது. அந்த இரவில் செய்யும் நன்மைகளுக்கு ஏனைய இரவுகளை விடவும் விஷேடமான கூலிகள் காத்திருக்கின்றன.



Category: வளைகுட செய்தி
0 comments