விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு 27, 28ல் காஞ்சிபுரத்தில் நடக்கிறது!
சென்னை, அக்.19:
இந்திய விமானப்படைக்கு ஆட்டோமொபைல் டெக்னிஷியன் உட்பட மூன்று பணியிடங்களுக்கு காஞ்சிபுரத்தில் தேர்வு நடைபெற உள்ளது.
இது குறித்து முன்னாள் படைவீரர் நலவாரியம் வெளியிட்ட செய்திகுறிப்பு:
இந்திய விமானப்படையில் ஒய் பிரிவில் பணியாற்ற, ஆட்டோமொபைல் டெக்னிஷியன், கிரவுண்ட் டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர், இண்டியன் ஏர்ஃபோர்ஸ் (போலீஸ்) ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகள் வரும் 27ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். இந்த தகுதி தேர்வில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட பணிகளுக்கான தேர்வு முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 1995ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 1998ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் பிறந்தவராகவும், 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில், 27ம் தேதி அன்று எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு நடக்க இருக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த நாள் நடைபெறுகின்ற நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
இது குறித்து, காஞ்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலவாரியத்தின் உதவி இயக்குனரும் முன்னாள் லெப்டினன்ட் கர்னலுமான பானு ஏழுமலை கூறியதாவது:
இந்த தகுதி தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், அன்றைய தினம் காலை 5 மணிமுதல் 10 மணிக்கு முன்பாக, மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வரவேண்டும். அவ்வாறு வரும்போது, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி. ஆகியவற்றின் ஒரிஜனல் மற்றும் சுய சான்றொப்பம் இடப்பட்ட அவற்றின் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 5 செ.மீ
ஙீ
4 செ.மீ அளவுள்ள 7 போட்டோ, எழுத்து தேர்வுக்கு தேவையான பேனா ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Category: வேலைவாய்ப்பு
0 comments