விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்! இளைஞர்கள் பங்கேற்க கலெக்டர் தரேஸ் அஹம்மது அழைப்பு!
பெரம்பலூர்,அக்.15:
விமானப்படைக்கு நடத்தப்படும் ஆள்சேர்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17வயது முதல் 21வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய நாட்டின் பாதுகாப்பில் இந்திய விமானப்படையின் பங்கு முக்கியமானதாகும். இந்தியவிமானப் படையின் குரூப் ஒய் (ஆட்டோ மொபைல் டெக்னீசியன், இந் திய விமானப்படை(காவல்) ஆகிய பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அக்டோபர் மாதம் 27ம் தேதி 7மணிக்குத் தொடங்கி 29ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 27ம்தேதியன்று எழுத்துத்தேர்வும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வும் நடைபெறும்.
28ம்தேதியன்று நேர்முகத்தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள கல்வித்தகுதி 12ம்வகுப்பில் 50சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக் கான சம்பளம், உடற்தகுதி விவரங்கள், பணிக் கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதிவிவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள
http://indianairforce.nic.in/
என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள் ளலாம்.இந்த முகாமில் கலந்து கொள்ள 27ம் தேதி காலை 7 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்விற்கு கொண்டுசெல்ல வேண்டிய பொருட் கள் குறித்த விவரங்கள் இணைய தள முகவரியில் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள 17வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் இந்தத் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று விமானப்படையில் பணியாற்றும் வாய்பினை பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி, வேலைவாய்ப்பு
0 comments