கஃபதுல்லாஹ்'வின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் நிறைவு : ரமலானில் திறப்பு !

மக்காவில் உள்ள கஃபதுல்லாஹ் எனப்படும் 'மஸ்ஜிதுல் ஹராம்' பள்ளிவாசலின் இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் முழுமையடைந்து விட்டதாகவும், ரமலான் மாதம் முதல், அப்பகுதிகள் தொழுகைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகளை பேட்டரி காரில் அமர்ந்தவாறு சுற்றிப்பார்த்து ஆய்வு செய்த 'ஹரமைன்'களின் (மக்கா & மதீனா பள்ளிவாசல்களின்) நிர்வாக பொறுப்பாளரான 'ஷேக் அப்துர் ரஹ்மான் சுதைஸ்' செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கஃபதுல்லாஹ்வின் இரண்டாம் கட்டப்பணிகள் 100% பூர்த்தியாகிவிட்டது, இதில் தவாப் செய்வதற்குரிய முதல் மாடியும் அடங்கும், இதனால் ரமலான் மாத உமரா யாத்ரீகர்களுக்கு வசதியாக, அப்பகுதி திறக்கப்படவுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டுமான வேலைகளை பொறுத்தவரை, தரைதளம் மற்றும் முதல் தளப்பணிகள் முழுமையடைந்து விட்டதாகவும், இரண்டாம் தளப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவித்தார், சுதைஸ்.
கஃபதுல்லாஹ்வின் கிழக்குப்பகுதியில் உள்ள 'பாபுல் பஃதஹ்' முதல் 'பாபுல் உமரா' வரையிலான இவ்விரிவாக்கப் பணிகளை 'பின்லேடன்' கட்டுமான நிறுவனத்தினர் இரவுப்பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
25,000 சதுர மீட்டர் அளவுக்காண கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ளதால், அங்கு மணிக்கு 75,000 நபர்கள் கூடுதலாக தொழமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments