ரமலான் மாத சுன்னத்துகள்!
மிக அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும் , குர்ஆன் மிக அதிகம் ஓத வேண்டும்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்- ரஸுல் ஸல் அவர்கள் மற்ற எல்லோரையும் விட மிக அதிகம் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார்கள். ரமலான் மாதத்தில் ஜிப்ரயில் அலை அவர்கள் வருகை தரும் போது நபி ஸல் அவர்கள் அதற்கு முன்பைவிட் மிக அதிகமாக சதகாக்கள் செய்வார்கள். ஜிப்ரயில் அலை அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபியவர்களை சந்திப்பவர்களாக இருந்தார்கள். நபியவர்களிடமிருந்து அவர்கள் குர்ஆனை செவிமடுப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரயில் அலை நபியவர்களை சந்திக்கும் போது சுழன்று அடிக்கும் காற்றை விட சிறந்த முறையில் தர்மங்களை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ( புகாரி , முஸ்லிம் )
மற்றவர்களுக்கு இப்தார் வழங்குதல்
ஜைத் பின் காலித் அல் ஜஹ்னி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் – நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்தவருக்கு நோன்பாளிக்குரிய கூலி கிடைக்கும். நோன்பாளிக்கு கூலியில் எவ்வித குறையும் செய்யப்படமாட்டாது. ( திர்மிதி ) இரவில் வணங்குதல் கத்ர்( கண்ணியம் ) – உடையஇரவைதேடுதல்
இறைநம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் – இறுதி பத்து ஆரம்பமாகிவிட்டால் நபியவர்கள் கச்சைக் கட்டிக்கொண்டு தம் வீட்டார்களையும் எழுப்பி கத்ருடைய இரவாக ( கருதிய வண்ணம் வணக்கமாக ) கழிப்பார்கள். ( புகாரி , முஸ்லிம் )மிக அதிகம் துஆ செய்தல்
சூரா பகராவில் நோன்பு பற்றிய சட்டங்களை எடுத்துரைத்து உடனடியாக துஆவை பற்றி அல்லாஹ் எடுத்து கூறுகிறான்.2- 186
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
துஆ கேட்கும் போது அதற்குரிய ஒழுங்குகளை கடைபிடிக்கும் போது துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனோதானோ என்றில்லாமல் , பல சிந்தனைகளுடன் இல்லாமல் உளத்தூய்மையுடன் கேட்க வேண்டும், ஆரம்பமாக அல்லாஹ்வை புகழ்தல், நபி ஸல் மீது ஸலவாத் பொழிதல் வேண்டும், தாழ்ந்த குரலில் , நடுநடுங்கி கேட்க வேண்டும், குற்றங்களை மனதார ஒப்புக்கொண்டு, அதிலிருந்து முழுமனதுடன் விலகிவிடுவதாக உறுதி பூண்டு, மூன்று முறை எடுத்துக் கூறி உறுதியாக மன்னிப்பான் என்னும் ஆழமான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாங்கு – இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம், பர்ளாத தொழுகைப்பிறகான நேரம், பஜ்ருக்கு முந்திய நேரம், இப்தாருடைய நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து துஆ செய்தால் ஏற்றுக்கொள்ளப்படுதவதற்கு வாய்புகள் உள்ளன.
அப்துல்லாஹ் பின் அம்ரு ரலி அறிவிக்கிறார்கள் – நபி ஸல் அவர்கள் கூறினார்கள் –நோன்பு திறக்கும் போது நோன்பாளியுடைய துஆக்கள் மறுக்கப்படுவதில்லை. ( இப்ன மாஜா )
நாம் பலகீனமான பெண்கள், குழந்தைகள், ஏழைபாழைகளை அதிகம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுடைய துஆக்கள் ரிஜ்க் உடைய விசாலத்திற்கும், அல்லாஹ்வுடைய நுஸ்ரத் – உதவிக்கும் பெரும் காரணமாக விளங்குகின்றன.
நபி ஸல் கூறுகிறார்கள் - உங்களுடைய பலகீனமானவர்களை கருத்தில் கொண்டே உங்களுக்கு ரிஜ்க் தரப்படுகின்றது, உங்களுக்கு உதவி செய்யப்படுகின்றது. ( புகாரி )
அல்லாஹ்விற்கு மாறு செய்வதிலிருந்து முழுமையாக விலகி விடுதல்
அபுஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் – நபி (ஸல்) கூறினார்கள் – உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிற்கும் நாளில் வெட்டி பேச்சுகள் வேண்டாம். , தீய வார்த்தைகளை பேசவேண்டாம். ( புகாரி ) அபுஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் – ரஸுல் (ஸல்) கூறினார்கள் – பொய் பேசுவதை விட்டும் அதன்படி நடப்பதை விட்டும் எவர் விலகிவிடவில்லையோ அவர் உண்ணாமலும் பருகாமலும் இருப்பதை விட்டும் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை. ( புகாரி )
பொதுவாக மனிதன் பாவங்கள் செய்வதற்கு காரணம் இரண்டு விஷயங்கள் ஆகும் ஒன்று ஷைதான் இன்னொன்று அவனுடைய நப்ஸே அம்மாரா ( பாவம் செய்ய தூண்டும் மனது ) ஆகும். இங்கே ரமலான் மாதத்தை முன்னிட்டு ஷைத்தானுர்ரஜீம் விலங்கிடப்பட்டு விடுகிறான். நோன்பு வைப்பதின் காரணமாக நப்ஸே அம்மாரா உடைய ஆற்றலும் சுருங்கிவிடுகிறது. இதற்குப் பிறகும் இந்த ரமலான் மாதத்தில் ஒருவன் பாவம் செய்கிறான் எனில் அவனை அல்லாஹ் பிரியப்பட்டு தடுக்காத வரை அவன் திருந்த முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் இவ்விரண்டின் தீமைகளை விட்டும் கவனமாக முறையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இரட்சகன் நம்மை இந்த ரமலானில் நல் அமல்களை செய்ய கிருபை செய்வானாக! (ஆமீன்)
ஜிஹாத் பீஸபிலில்லாஹ்
உக்பா பின் ஆமீர் ரலி அறிவிக்கிறார்கள் – ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்றால் நூறு வருடம் தொலைவு தூரம் வரை நரகை தூரப்படுத்துகிறான். ( நஸாயி ) அபு ஸயீத் குத்ரி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் – ரஸுல் ஸல் அவர்கள் கூறினார்கள் - அல்லாஹ்வுடைய பாதையில் ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்றால் அவரது முகத்தை எழுபது வருடம் வரைக்கும் தூரமாக்குகிறான். ( புகாரி, முஸ்லிம் )
அல்லாஹ்வின் பாதை என்று ரஸுல் ஸல் அவர்கள் பொதுவாக கூறியுள்ளார்கள் இது கிதாலில் கலந்து கொள்வதை மட்டும் குறிக்காது. அதற்காக தயார் செய்வது, பிறரை தூண்டுவது, உதவி செய்வது, ஷஹாதத்தை வேண்டி நடுநடுங்கி துஆ செய்வது, முஜாஹிதீன்களின் வீட்டார்களை கண்காணித்து கொள்வது, முஜாஹிதீன்களுக்காக துஆ செய்வது ஆகிய அனைத்தும் அடங்கும்.
இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு பெரும் போர்களான பத்ரு, மக்காவெற்றி ஆகியவை ரமலானில் நடந்தவை ஆகும். பத்ரை யவ்முல் புர்கான் – உண்மை எது பொய் எது என்று உலகிற்கு பிரித்து காட்டிய போர் என்றும் மக்காவெற்றியை பத்ஹுன் முபீன் – தெளிவான வெற்றி என்றும் குர் ன் எடுத்தியம்புகிறது இதன் மூலம் பூமிப்பந்தின் மிகத் தூயமையான பகுதியான மக்காவை முஷ்ரிக்கீன்களைவிட்டும் ஷிர்க்கை விட்டும் தூய்மைப்படுத்தப்பட்டது. ரமலானில் ஜிஹாத் செய்தாலும் ஜிஹாதின் போதும் நோன்பு நோற்றாலும் நன்மைகள் எண்ணிலடங்கா வகையில் கிடைக்கின்றன.
Category: சமுதாய செய்தி
0 comments