பெரம்பலுரில் வரும் 15 ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

பெரம்பலூர்,ஜூன்12:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகம், புதுவாழ்வுத்திட்டம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூரில் 15ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்(பொ) இராஜன்துரை தெரிவித்திருப்பதாவது;
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலு வலகம், புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஊரக வளர்ச்சி கூட்டஅரங்கில் வரும் 15ம் தேதி காலை 10மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட 6தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு பயிற்சிமுடித்தவர்கள், பொறியியல் பட்டயம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவது ஒருபட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெற லாம். மேற்கண்ட தகுதிகள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், தங்களது அனைத்து கல்வி சான்றுகளின் அசல் மற்றும் நகலுடன், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்களுடன் நேரில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தின் பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என கலெக்டர்(பொ) இராஜன்துரை வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Category: வேலைவாய்ப்பு
0 comments