தமிழ்நாட்டில் உள்ள மதரஸாக்களை காக்க இஸ்லாமியர்கள் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள மதரஸாக்களை (திருக்குர்-ஆன் பாடசாலை) காக்க இஸ்லாமியர்கள் தாங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியச் செயலரும்,
காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் எம்பியுமான எம். அப்துல் ரஹ்மான்.
மயிலாடுதுறை வட்டம், நீடூர் ஜாமி ஆ மிஸ்பாஹூல் ஹூதா (ஜேஎம்எச்) அரபிக் கல்லூரியின் 102-ம் ஆண்டு நிறைவு விழாவும், கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரி தலைவர் ஏ. நஜிமுதீன் தலைமை வகித்தார். விழாவில் எம். அப்துல் ரஹ்மான் மேலும் பேசியது:
மதரஸாக்கள் மனிதனை பன்படுத்தி, உயர்ந்த நிலைய அடைய செய்யும் இடம்.. தமிழகத்தில் உள்ள மதரஸாக்களில் பல இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவைகள் காக்கப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து கல்லூரியில் பயின்ற 19 பேருக்கு மௌலவி பாஜில் மிஸ்பாஹி பட்டங்களையும், 12 பேருக்கு மௌலவி ஆலீம் மிஸ்பாஹி பட்டங்களையும், 4 பேருக்கு காரீ பட்டங்களையும், 2 பேருக்கு ஹாபிழ் பட்டங்களையும் கல்லூரி தலைமைப் பேராசிரியர் எம்.எஸ். அப்துஸ் சலாம் வழங்கினார்.
Category: சமுதாய செய்தி
0 comments