இந்த வருடம் வெளிநாட்டு யாத்திரிகர்கள் 1.4 மில்லியன்வருகை : சவுதி அரேபியா!
மக்கா: நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவுபெறும் வெளிநாட்டினரின் ஹஜ்ஜிற்கான வருகையின் பிரகாரம் 1.4 மில்லியன் வெளிநாட்டு யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக வந்திருப்பதாக சவுதி அரேபியாவின் ஹஜ் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. ‘ஹஜ்ஜூல் அக்பர்’ எனும் பெரிய ஹஜ் இம்முறை இடம்பெறுவதால் அதிகளவான உள்ளுர் யாத்திரிகர்கள் இன்று அரபாவில் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
பிரதிவருடமும் 2 மில்லியன் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறேவேற்ற அரபாவில் தரிப்பது வழமை. எனினும் சிலவேளை எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், குறைவதற்கும் வாய்ப்பிருப்பதாக ஹஜ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. ‘இஸ்லாமிய தேசத்துப் போராளிகளின் சேஷ்டைகள் ஹஜ்ஜின்போது தவிர்க்கப்படல் வேண்டும்’ என சவுதி அரேபிய இமாம்கள் ஏற்கனவே அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: வளைகுட செய்தி
0 comments