சவூதி அரேபியாவில் படுகொலை குற்றவாளிக்கு தலை வெட்டி மரண தண்டனை!
சவூதி அரேபியாவில் படுகொலை குற்றவாளியொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
காடிப்பிராந்தியத்தை சேர்ந்த மொஹமட் அல் - தரோதி என்ற மேற்படி நபர் அப்துல்லாஹ் அபு - சரீர் என்ற நபருடன் ஏற்பட்ட வாக்குவாதமொன்றையடுத்து அவரை காரால் மோதிக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவரது மரண தண்டனை நிறைவேற்றத்துடன் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரண தண்டனை நிறைவேற்றத்துக்குள்ளானவர்கள் தொகை 38 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 4ம் தேதி வரையான காலப்பகுதியில் 19பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments