பொறியியல் கலந்தாய்வு நிறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன!
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு கல்லூரிகளில் இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. இதில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடத்திட்டம் கொண்ட கல்லூரிகளை தேர்வு செய்தனர். 28 நாட்களாக நடைபெற்ற இந்த கவுன்சிலிங் நிறைவு பெற்றது.
அங்கீரிக்கப்பட்ட 538 கல்லூரிகளில் மொத்தம் 211589 இடங்கள் இருந்தன. இதில் கவுன்சிலிங் மூலம் 109079 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 102510 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சுய நிதிக் கல்லூரிகளில் மட்டும் 101705 இடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக துணை கலந்தாய்வு நாளை மறுநாள் நடக்கிறது. இதில், சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் நாளை பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Category: மாணவர் பகுதி
0 comments