சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார் துபாயில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்திய கர்நாடக வாலிபர் கைது!
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து 5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கர்நாடக வாலிபரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.அதிகாரிகள் கண்காணிப்பு
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டுவருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.5 கிலோ தங்கம் கடத்தல்
அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விபின் அப்துல் (வயது 30) என்பவர் சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரது சூட்கேசுகளை சோதனை செய்தபோது அதில் ரகசிய அறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றில் இருந்து 10 தங்கக்கட்டிகள் இருந்தன. ஒவ்வொரு கட்டிகளும் தலா ½ கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ. 1½ கோடி ஆகும்.
இதுதொடர்பாக கர்நாடக வாலிபரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments