திருச்சியில் வரும் 9,10 தேதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு அதிகாரி தகவல்!!
வருகிற 9, 10–ந் தேதிகளில் திருச்சி உறையூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள கல்வி தகுதியாக 12–ம் வகுப்பு அல்லது கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 26 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள். எனவே தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள், இந்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி நேர்காணலுக்கு வருகை தந்து பயன்பெறலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், மார்பளவு புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டா 2 நகல்களுடன் காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Category: வேலைவாய்ப்பு
0 comments