கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் 89,382 பேர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு!
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் கல்வி அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதன் விவரம் குறித்து நேரடியாக ஆய்வு நடத்தினர். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 452 தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 382 மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.இதில் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் 3 ஆயிரத்து 642 பள்ளிகளில் 42 ஆயிரத்து 586 பேரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 5,441 தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்து 837 பேரும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள 369 பள்ளிகளில் 2 ஆயிரத்து 959 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அனைத்து தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 49 ஆயிரத்து 864 பேர் மட்டுமே ஆர்டிஇ சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு பயனடைந்தனர்.
இந்த ஆண்டு கூடுதலாக 39 ஆயிரத்து 518 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் முழு அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணம் சுமார் 35 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு சேர வேண்டிய நிதியை வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
Category: மாணவர் பகுதி
0 comments