சவுதிக்கு புனித யாத்திரை சென்ற 82 வயது முதியவர் 4 மாதங்களாக மாயம்!
கேரளாவை சேர்ந்த 82 வயது முதியவரான முஹம்மத் ரஷீத் முஸ்தபா என்பவர் ‘உம்ரா’ என்னும் புனித யாத்திரை செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் உறவினர்களுடன் சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
27-04-2014 அன்று உம்ராவை நிறைவு செய்து விட்டு மக்கா நகரின் பெரிய மசூதி அருகேயுள்ள ஒரு ஓட்டலில் யாத்திரை குழுவினர் தங்கியிருந்தபோது, டீ குடித்துவிட்டு வருவதாக வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.
போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும், ஆஸ்பத்திரிகள் உள்பட பல இடங்களில் விசாரித்தும் சுமார் 4 மாதங்களாக அவரைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவரை சவுதியில் தேடிக் கொண்டிருக்கும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: வளைகுட செய்தி
0 comments