Home �
வளைகுட செய்தி
� 2 எகிப்தியர்கள் கொல்லப்பட்டதால் குவைத்தில் இந்தியத் தொழிலாளர்கள் மீது எகிப்தியர்கள் தாக்குதல்!
Unknown |
11:47 PM |
0
comments
குவைத்: குவைத்தில் எகிப்தியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் பல இந்தியர்கள் படுகாயமடைந்தனர். தாக்குதல் தொடர்ந்து வருவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இந்திய, எகிப்திய தொழிலாளர்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிற்சாலை பேருந்தில் இருதரப்பினர்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் இரு எகிப்தியர்கள் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 25 இந்திய தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எகிப்தியர்கள் இறந்த தகவல் வெளியானதை தொடர்ந்து குவைத்தில் வசித்து வரும் இந்தியர்கள் மீது எகிப்தியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் தாக்குதல் தொடர்ந்து வருவதால் குவைத்தில் உள்ள இந்தியர்கள் செய்வது அறியாமல் குடும்பத்தினருடன் தவித்து வருகின்றனர். மூன்று நாட்களாக உணவின்றி தவித்து வருவதாக கூறிய இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தங்களை காப்பாற்றும் படி இந்திய தூதரகத்துக்கும், பிரதமருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category:
வளைகுட செய்தி
About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!
0 comments