மலேசிய விமான விபத்து: பலியானோர் விவரம்!
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக எம்.எச்.17 பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், 283 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.
மலேசிய விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீ பிடித்தபடி, வானில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது.
இந்த விபத்தில் பலியானவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியா-27, மலேசிய-23, இந்தோநேசியா-11, பிரிட்டன்-6, ஜெர்மனி-4, பெல்ஜியம்-4, பிலிப்பைன்ஸ்-3, கனடா-1, 50 பேரின் அடையாளம் தெரியவில்லை.
Category: உலக செய்தி
0 comments