பாஸ்போர்ட் விரைவாக வழங்க திருச்சி - தஞ்சையில் சிறப்பு விண்ணப்ப முகாம் !

இதுகுறித்து மண்டல பாஸ் போர்ட் அதிகாரி பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் எவ்வித இடர்பாடு இன்றி வரிசையில் நிற்காமல், வெகு நேரம் காத்திருக்காமல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருச்சி பாஸ் போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஒரு நாளைக்கு 850க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்கிறது. தற் போது சமீபத்தில் பாஸ்போர்ட் மேளா (அதாலத்) நடத்தப்பட்டதில், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர். அதுபோல் வரும் 12ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது. மேளாவில் கலந்து கொள் ளும் விண்ணப்பதாரர்கள் ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் புதிதாக பாஸ் போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தவர்கள் அதற்கான நகல்களுடன் இந்த மேளா வில் கலந்து கொள் ளலாம். காலை 9.30 மணிக்கு துவங் கும் மேளாவில் 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப் படும். அதுபோல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.passportindia.gov.in மற்றும் 1800-258- 1800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
இந்த மேளாவில் மாற்று திறனாளிகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 வயதிற்கு குறைந்த குழந்தைகள், அரசு ஊழியர்கள் (அடையாள அட்டையுடன்) மற்றும் போலீஸ் விசாரணை சான்றிதழ் முடிந்தவர்கள் நேரிடையாக கலந்து கொள்ளலாம்.
Category: மாநில செய்தி
0 comments