விண்ணப்பித்த 2 மாதத்தில் புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு தகவல்!
இதுகுறித்து சட்டசபையில் இன்று (17ஆம் தேதி) கேள்வி நேரத்தின் போது அவர் கூறுகையில், ''புதிய ரேஷன் கார்டு கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது அரசு வழங்கி வரும் விலையில்லா பொருட்களை பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் உள்ள 2 அல்லது 3 பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு கொடுக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்கு தகுந்த ஆய்வு செய்த பிறகு, தகுதி இருந்தால் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக சென்னை மாவட்டத்தில் மாதத்தின் 2வது சனிக்கிழமைகளிலும், மற்ற மாவட்டங்களில் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமைகளிலும் குடும்ப அட்டைதாரர் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு, அவர்கள் அளிக்கும் மனுக்கள் காலவரம்புக்குள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது'' என்றார்.
Category: மாநில செய்தி
0 comments