குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
வரும் 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1 முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
இதற்கு, 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 29 மையங்களில், தேர்வு நடக்கிறது. இவர்களுக்கான, ஹால் டிக்கெட்,www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வர்கள், பதிவு எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Category: உயர் கல்வி
0 comments