ஐநா வில் உரையாற்ற போகும் நெல்லை சார்ந்த ஜமால் முஹம்மதுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம் !!
கடந்த இரு வருடங்களாக ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள LLDC’s (Landlocked Developing Countries) எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை தயார் செய்து வந்துள்ளார் நெல்லை சார்ந்த ஜமால் முஹம்மது.
முழுமையான கட்டுரையை African Union (Organ of United Nations ) எனப்படும் ஒரு அமைப்பிடம் சமீபத்தில் submit செய்திருக்கிறார் .
அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையின் உலக வர்த்தக மாநாட்டு அமைப்பிடம் (UN-CTAD) இருந்து வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது.
மேலும் ஜூலை ஒன்று முதல் மூன்று வரை நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து அவர் ஆய்வு கட்டுரை தலைப்பில் (Brighten Africa) சிறிய உரை நிகழ்த்த வாய்ப்பும் வழங்க பட்டு இருக்கிறது . இந்த அமைப்பே ஆப்ரிக்காவில் வணிக பொருளாதார முன்னேற்றத்திற்காக பல நாடுகளுடன் இணைந்து பாடுபட்டு வருவது குறிப்பிட தக்கது .
வரும் ஞாயிறு அன்று காலை (29.06.2014) ஜெனீவா பயணமாக உள்ளார் அவருக்கு ஓர் சபாஷ்
Category: மாநில செய்தி
0 comments