மதம் கடந்த மனிதாபிமானம்: இந்து பெண்னை காப்பற்ற முயன்று உயிரழந்த 2 முஸ்லீம் வாலிபர்கள்!
மொராதபாத்: உத்தரபிரேதசம் மாநிலம் மொராதபாத் வகுப்பு கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகராகும். அங்கு நடந்த சோக சம்பவத்தில் மத நல்லிணக்கம் மலர்ந்து மனிதம் தழைத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் சுமன் என்ற பெண் தவறி விழுந்து விட்டாள். இதனை நேரில் கண்ட முஸ்லிம் வாலிபர்கள் தானிஷ்(16) மற்றும் நாமன் ஆகியோர் அப்பெண்னை காப்பாற்றும் நோக்கத்தில் அவர்களும் சாக்கடையில் குதித்துள்ளனர்.
துரதிஷ்சடவசமாக இருவரும் அதில் சிக்கினர். உடனடியாக மீட்டு படையினர் வரவழைக்கப்பட்டு குழியில் விழுந்த மூவரையும் பிணமாக மீட்க முடிந்தது. ஒருவரின் உயிரை காப்பற்ற தன்னுயிர் நீத்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கண்ணீருடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: மாநில செய்தி
0 comments