ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாம் ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஏளன பார்வையுடன் என்னை கடந்து செல்கிறாள்,
நவநாகரீக நங்கை ஒருத்தி...
என் மார்க்கம் எனக்களித்த
சுதந்திரத்தின் எல்லை பற்றி
அவளுக்கெங்கே தெரிந்திருக்க போகிறது.... பாவம்....!
கண்ணியம் காக்க நான் அணியும் உடை
உன் கண்ணை உறுத்துகிறதே பெண்ணே...,
அப்படி என்றால் எந்த அருகதையும் இல்லை"
உனக்கு என் ஹிஜாப் பற்றி பேச.....!!!!
நீ ஒரு காட்சி பொருள்.....
ஆனால் நானோ பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம்..
என்னை தற்காத்து கொள்ள
என் மார்க்கம் எனக்களித்த கேடயம் ஹிஜாப் ...!!
Category: கவிதை
0 comments