மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல் தொழில் முனைவோராக வேண்டும் கலெக்டர் தரேஸ் அஹமது பேச்சு!
மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் தொழில் முனைவோராக வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கூறினார்.
கருத்தரங்கம்
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் உள்ள வணிகவியல் துறையில் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கலெக்டர் தரேஸ் அஹமது குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:–
இந்திய அளவில் தமிழகம் உயர் கல்வி கற்பதில் நான்காவது இடம் வகிக் கிறது. பள்ளிப்படிப்பை முடிக் கும் 33 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்விக்கு செல்லும் நிலை உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ– மாணவிகள் உயர் கல்வி கற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயல லிதா வேப்பூர், வேப்பந் தட்டை ஆகிய இடங் களில் கல்லூரிகளை தொடங்கி உள்ளார். இதன் மூலமாக வெளி மாவட்டங் களுக்கு சென்று கல்லூரி கல்வி கற்ற நிலை மாறி, நமது மாவட் டத்திலேயே தங்கள் பகுதியி லேயே உயர்கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழக அரசினால் பெரம் பலூர் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகள் மானிய உதவி யில் தொடங்கப்பட்டு, தற் போது பலரும் தொழில் முனைவோராக கிராம பகுதி களில் உருவாகி வருகிறார்கள். சின்ன வெங் காயம், பருத்தி, மக்காச்சோளம் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங் குகிற பெரம்பலூரில் அதனை மூலக்கூறுகளாக கொண்டு இயங்கும் தொழிற் சாலைகளை நமது மாவட் டத்தில் ஏற்படுத்த மாண வர்கள் முன்வர வேண்டும்.
சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ.12–க்கு நம்மிடமிருந்து கொள்முதல் செய்து அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களாக மாற்றி பல மடங்கு அதிக விலையில் மதிப்புடைய உணவுப் பாருட்களாக நம்மி டையே விற்பனை செய் கிறார்கள். எனவே மாண வர்கள் அனைவரும் வேலை வாய்ப்புக்காக காத்திராமல் கிடைக்கும் வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி தொழில் முனைவோராக உரு வாகி தங்கள் பகுதியில் பல ருக்கு வேலைவாய்ப்பு தருபவர் களாக உயர வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் இந்திய அயல் நாட்டுப்பணி அதிகாரி கள் அஸ்வின் பாஸ்கரன், விக்ரம், கல்லூரி முதல்வர் காசி நாதன், வணிகவியல் துறைத் தலைவர் சாமிநாதன், முனைவர் பாலாஜி, மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments