புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா?
வேலை தேடுபவர்களுக்கு உடனடித் தேவை ஒரு விண்ணப்பம். அதோடு நம்மைப் பற்றிய ஒரு தன் விவரக் குறிப்பு (Bio – Data). இந்தத் தன் விவரக் குறிப்பில் நாம் என்னவெல்லாம் சேர்க்கலாம்? எப்படி அதை வடிவமைக்கலாம்? என்று பலரும் குழம்பிப் போகிறார்கள். இதற்கும் ஓர் ஆங்கில இணைய தளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் உள்ள “உங்கள் தன் விவரக் குறிப்பை உருவாக்குங்கள்” என்பதைச் சொடுக்கினால் ஒரு புதிய பக்கம் திறக்கிறது. இந்தப் பக்கத்தில் இடது புறம் அடிப்படைத் தகவல்கள் (Basic Information), தகுதிகள் (Qualifications), கல்வி (Education), ஆர்வம் (Interests), உசாத்துணை (References) எனும் தலைப்புகள் உள்ளன. இந்தத் தலைப்புகள் தவிர புதிய தலைப்புகளைத் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்வதற்கான வசதியும் உள்ளது. இந்தத் தலைப்புகளைச் சொடுக்கினால், வலது புறத்தில், ஒவ்வொரு தலைப்பிலும் தன் விவரக் குறிப்புக்குத் தேவையான தகவல்களுக்கான காலிப்பெட்டிகள் கிடைக்கின்றன. இவற்றில்
நாம் நம்மைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யலாம். கடைசியாக இந்தத் தன் விவரக் குறிப்புகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளவும் (Preview), நம் கணினியில் சேமித்துக் கொள்ளவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் நமது தன் விவரக் குறிப்பை அச்சிட்டு நம் விண்ணப்பத்துடன் சேர்த்துக்கொள்ள முடியும் அல்லது மின்னஞ்சல் வழியாக நாம் விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்க முடியும்.
இந்தத் தளத்தில் செயல் அலுவல் (Executive), நளினம் (Elegant), தடிமன் (Bold), இலக்கியம் (Literature), நுட்பம் (Finesse), மிகப் பெரிய (Metro) எனும் தலைப்புகளில் சில மாதிரித் தன் விவரக் குறிப்புகள் (Sample Resume) இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தளத்தில் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான தன் விவரக் குறிப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
10 லட்சத்துக்கும் அதிகமான தன் விவரக் குறிப்புகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிதாக வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொழில் முறையிலான அழகிய தோற்றத்தில் தன் விவரக் குறிப்பைத் தயார் செய்ய https://cvmkr.com/ எனும் இணைய முகவரிக்குச் செல்லலாமே…!
Category: வேலைவாய்ப்பு
0 comments