எபோலா வைரஸ் தொடர்பான விவரங்கள் அறிய தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொலைபேசி எண்கள் அறிமுகம்!
சென்னை,
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரு வாரமாக எபோலா வைரசினால் தாக்கப்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக எபோலா வைரசை தடுக்கும் வகையில், விமானம் மற்றும் கப்பல் மூலம் இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளையும் முறையான பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்தந்த நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் எபோலா வைரஸ் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எபோலா வைரஸ் குறித்த தகவல்கள் மற்றும் அது சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர் பற்றிய தகவல்களை தெரியப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை உதவி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
044-23450496, 044-24334811 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு எபோலா வைரஸ் தொடர்பான விளக்கங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். இது 24 மணி நேர சேவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Category: மாநில செய்தி
0 comments