சென்னை விமான நிலையத்தில் 5½ கிலோ தங்கம் சிக்கியது வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது!
சிங்கப்பூர் விமானம்சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த முகமது பாபு (வயது 30) என்பவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு திரும்பி இருந்தார். அவர் பதற்றமாக அங்கும், இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார். பின்னர் அவசரமாக கழிவறைக்கு செல்வதை கண்காணிப்பு கேமராவில் அதிகாரிகள் கண்டனர்.
வாலிபர் கைதுஉடனே அங்கு சென்று அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது சூட்கேஸ் மற்றும் பைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
2 கிலோ எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இது தொடர்பாக முகமது பாபுவை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
3½ கிலோ தங்கம் சிக்கியதுஇதேபோல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3½ கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Category: மாநில செய்தி
0 comments