பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து உர விற்பனையாளர்களும் தங்களது கடையில் உரம் இருப்பு மற்றும் விலைக்கான விவரப் பட்டியல் கண்டிப்பாக வைக்க வேண்டும்!கலெக்டர் தரேஸ்அஹமது பேச்சு!
பெரம்பலூர் மாவட்ட தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனையாளர்களுக்கான ‘உரம் பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கான புத்தூட்டப் பயிற்சி’ வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தரேஸ்அஹமது இ,ஆ.ப., அவர்களது தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வி.ராஜன்துரை அவர்களது முன்னிலையில் நேற்று (08.08.2014) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் பூச்சி மருந்து சட்டம் 1968 ஆகியவற்றுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும், அனைத்து உர விற்பனையாளர்களும் தங்களது கடையில் உரம் இருப்பு மற்றும் விலைக்கான விவரப் பட்டியல் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்றும், உரம் விற்பனைக்கான ரசீது கொடுக்க வேண்டும் என்றும், உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக உரங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் கூறினார். மேலும், உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது நேரடி விற்பனையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
உரம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1985-ன் கீழ் உள்ளதால் விற்பனையாளர்கள் அச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் தங்களது உரம் மற்றும் பூச்சி மருந்து உரிமங்களை பார்வையில் படுமாறு Display செய்து வைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் உரங்கள் போதிய அளவு இருப்பு இருப்பதாகவும், எதிர்வரும் பயிர் காலத்திற்கான உரத் தேவைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி
0 comments