வேலைவாய்ப்பு அலுவலகங்களை தொழில் தரும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு!
புதுடில்லி: "வேலைவாய்ப்பு அலுவலகங்களை இளைஞர்களுக்கு தொழில் தரும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது" என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டில் 92 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் 3,785 பணியாளர்கள் வேலை இழந்தனர். 2012ல் 45 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 1,603 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப பயன்பாடு, கலந்தாய்வு மற்றும் பயிற்சி மூலமாக ஒளிவுமறைவற்ற வகையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் எல்லாம் தொழில் தரும் மையங்களாக மாற்றப்படும்.
தொழிற் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் 22 மத்திய தொழில் தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் பல மாநிலங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. நிறுவனங்களில் தொழிலாளர் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Category: மாணவர் பகுதி
0 comments